நிலா பெண்ணே ...
நீயோ விண்மீன் கூட்டங்களுடன்
நானோ தனிமை சிறையில் ....
சுட்டெரிக்கும் வெப்பத்திலும் நீ நின்றாய் ,
ஏனடி என்னை நீ பிரிந்து சென்றாய் .....
நீ என்னை சுற்றி வரும்போது மயங்கிநேனடி உன் அழகில் ,
இதிலிருந்து எப்படி மீண்டு வாழ்வேன் இந்த உலகில்...
என்னை போன்ற மாற்று பொருளை கொடுத்து விட்டார்களா உன்னிடம்,
செயற்கை வேண்டாம் வா என்னிடம்...
எனக்கும் உன்னைப்போல் ஒரு மாற்று பொருளை தருவார்களடி,
அது உன்னைப்போல் என்னை ரசிக்கும் என்று என்ன நிச்சயமடி ....
உன்னை தேடுது இந்த நெஞ்சம்,
உனது மடியில் இடம் தா கொஞ்சம் ....
உன்னையும் என்னையும் போல் யார் இந்த சூரிய குடும்பத்தில் ,
இதை புரிந்து கொண்டவர் யார் இந்த மனித குலத்தில்...
நீ சுற்றி வந்த பாதைகள் தேடுதடி உன்னை,
அது அனுமதிக்காது வேறு ஒரு பெண்ணை...
என் வெப்பத்தின் அளவை இந்த உலகம் அறியும்,
உன்னை என்னை தவிர வேறு யார் அறிவார்..
மனிதன் கண்டு பிடித்து விட்டானாம் 10 -வது planet
அதை நிலா இனி சுற்றி வரவேண்டுமாம் ....
இது தான் விதி என்றால் சூரியன் மட்டும் என்ன செய்ய முடியும்...
ஒளிரும் நிலவை தூரத்தில் இருந்து பார்த்து மகிழ தானே முடியும்.....