Thursday, September 23, 2010

ஒரு குழந்தையின் கவிதை

அவளை பார்க்கும்போது சொல்ல நினைக்கிறேன்...!
அவள் சிரிக்கும்போது சொல்ல நினைக்கிறேன்...!
அவள் என்னை முத்தமிடும் போது சொல்ல நினைக்கிறேன்...!
ஆனால், சொல்ல முடியவில்லை!!!

...கடவுளே...ஏன்?
எனக்கு சீக்கிரம்பேசும் சக்தியை கொடு...

அவளை ''அம்மா" என்றழைக்க...!!!

(ஒரு குழந்தையின் கவிதை)
Read more »

Friday, June 4, 2010

கருவறைத் தோழி

கருவறைத் தோழி
அன்பெனும் அழகான வார்த்தையை
அற்புதமாய் விளக்கியவள்!!!
Read more »

Wednesday, April 14, 2010

மருதாணிக் கனவுகள்

அத்தனை குதிரைகளும்
விடுப்பில் இருந்தாலும்
காலத் தேர்
ஓடிக்கொண்டே தான் இருக்கிறது.
என் வீட்டின்
மெழுகிய திண்ணை
சிமின்ட் பூசப்பட்டு,
இப்போது
கம்பி வேலைப்பாடுகளுக்குள்
கைதியாய்,
பின்பக்கம் இருந்த
சாம்பல் கூடும்,
சருகுக் குழியும்
ஸ்டவ் மேடைகளுக்கு கீழ் சமாதியாய்,
ஓட்டை வெறித்துப் பார்க்கும்
என்
படுக்கையறைக் கட்டில்
இப்போது
பாதி வழியில்
காங்கிரீட் தட்டினால்
தடுத்து நிறுத்தப்படுகிறது,
அந்த
நடு அறையின்
பலகை அலமாரி தந்த
வேப்பெண்ணை வாசம்
இப்போதெல்லாம் வீசவில்லை
விட்டில்கள்
தட்டி விளையாடும்
புட்டிகள்,
கைபொத்திக் காப்பாற்றும்
மண்ணெண்ணை விளக்கு,
படுக்கையாய்
அப்பா உபயோகித்த
மரப் பத்தாயம்,
எதுவும் இந்த
மெத்தை உலகில் மீதமில்லை.
எல்லாம்
மாறினாலும்,
இப்போதும் மாறாமல்
அப்படியே இருக்கிறது.
புகைப்படத்தில் சிரிக்கும்
தாத்தாவின்
வெற்றிலைப் புன்னகை.
Read more »

இணையக் காதல்…

இது
இருபதாம் நூற்றாண்டின் காதல்.
விரலாலும் குரலாலும்
விருப்பங்கள் பரிமாறிக் கொள்ளும்
விஞ்ஞானக் காதல்.
விழிபார்த்து வார்த்தைகளை
விழுங்கி விட்டேனென்று
கவிஞர்கள்
இனி பொய் சொல்லவேண்டாம்.
யாரும் பார்க்கக் கூடாதென்று
நெரிசல் நகரங்களில்
நிழல்ப்பூங்கா தேடவேண்டாம்.
மணிக்கணக்கில் அலங்காரம் செய்து
பிம்பங்களோடு பிடிவாதம் பிடித்து
கசங்காமல் நசுங்காமல்
நிழல் கூடக் கலையாமல்
நடக்கும்
அவஸ்த்தை இனி வேண்டாம்.
இந்த நேரம் பார்த்தா
இவன் இங்கே வரவேண்டுமென்று
பயத்தின் படபடப்பில்
இதயத்துடிப்பை இறக்குமதி செய்யவேண்டாம்.
தொடுதல்களால் பற்றிக்கொள்ளும்
தொட்டாச் சிணுங்கி இலைகளாய்
எத்தனை நாள் தான் காதலிப்பது ?
காக்கவைத்ததற்குக் காரணத்தை
எத்தனை நாள் தான்
பிரதி எடுப்பது.
புதிதாய் கொஞ்சம் பேசுவோமே…
உலக வலையில்
ஏதோ ஓட்டையாம்.
கணிப்பொறி என்னோடு
முரண்டு பிடிக்கிறது.
தொலைபேசி
நேற்றைக்கு மூர்ச்சையாகி விட்டது.
காதலில் பொய் சொல்வது விதியாகி விட்டது
அதை
புதிதாய் சொல்வதற்கு பழகிக் கொள்ளலாம்.
விழிகள் இரண்டும் மோதும் முன்
விரல்கள் விரலிடை தூங்கும் முன்..
தீண்டலின் தூண்டல் துவங்கும் முன்
இதயங்களிடையே
நம்பிக்கை பரிமாறுகிறதே விஞ்ஞானக் காதல் !!!
காதலுக்கு
சிணுங்கலின் வெப்பத்தை விட
நம்பிக்கையின் சப்தம் தானே
தேசிய கீதம் !!!
Read more »

Tuesday, April 13, 2010

Rasigan Kavithaigal
Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

Read more »

அன்பே

“என்னிலும் சிறந்த துணையை அடைந்தால்- அன்பே… நீ என்னை மறப்பாய்.”
“என்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால்- அன்பே… நீ என்னை நினைப்பாய்.”
காதலையும் வாழ்க்கையையும் மனித உள்ளங்களையும், அதன் தேடுதலையும், ஆசாபாசங்களையும் முழுமையாக உணர்ந்த ஒரு மனிதனின் யதார்த்த கவிதை இது.
ஆனால் வாழ்க்கை பிடிபடாத காலத்தில், காதல் தான் பிரதானம் என்று நினைத்து வாழ்ந்த காலத்தில்… காதலுக்கு இந்த கவிதை அவமானம் செய்வதாய் தோன்றியது. மேலும், இந்த கவிதை சிறுபிள்ளைத்தனமாகவும் முட்டாள்தனமாகவும் பட்டது.
காதல் என்பது இவ்வளவு தானா என்ன?
காதல் எவ்வளவு உயர்வானது?!
மனைவிக்காக காதலை மறக்க முடியுமா? கவிதையா இது..? ‘பிதற்றல்’ என்றே தோன்றியது. ஆனால், அதுவே இன்று எனக்கும் கவிதையாக வந்துள்ளது.
இப்படி “உன்னிலும் சிறந்த துணையை அடைந்தால் – உன்னை மறக்கக்கூடும்… உன்னிலும் தாழ்ந்த துணையை அடைந்தால் – உன்னை நினைக்கக் கூடும்”.
உலகிலே எல்லாமே நீர்த்து போக கூடியவையே. விதிவிலக்காகுமா, காதல் மட்டும்? மனித வாழ்வின் பெரும்பாலான அம்சங்கள் சுயநலத்தின் அடிப்படையில் தான் வருபவை. உற்று நோக்கின் காதல் கூட அப்படித்தான் என்று கருதுகிறேன்.
காதலும், காதலியும் எனக்கு சில பாடங்கள் கற்று கொடுத்துள்ளன. மனிதன் மானமிழந்தே வாழும்போது காதலியை இழந்தா வாழ முடியாது. என் காதலியாக உன்னை பார்த்த போது இருந்த முகம் + மனம் – இப்போது வேறு ஒருவரின் மனைவியாக பார்க்கும் போது முற்றிலும் வேறு விதமாக.
நீ இல்லாத வாழ்க்கையை நினைத்து கூட பார்க்க முடியாது என்று நீயும் சொன்னாய்… நானும் சொன்னேன்… ஆனால் பாரேன். அது நடந்ததா, இல்லையே… ஆனாலும் வாழ்கிறோம்.
பேசியாக வேண்டுமே என்பதற்காக எதையாவது பேசுகிறார்களோ காதலர்கள். அப்படித் தான் இருக்க வேண்டும். நீ போன பின்னால் எல்லாமே என்னை விட்டு போய் விடவில்லை.
அப்படியே தான் பொழுது புலருகிறது. அம்மா காபி கொடுக்கிறாள். வேலைக்கு போகிறேன். இடை இடையே உன் ஞாபகம் வருகிறது. ஏதோ ஒரு வெற்றிடம் மட்டும். அம்மாவிடம் பேசும் போது அந்த வெற்றிடம் மறைவதாக தோன்றுகிறது.
இன்று… “நீயில்லாத வாழ்க்கையை வாழ கற்று கொண்டு தேறி இருப்பதாக” தோன்றுகிறது.
அப்படியெனில் காதல்..?
காதல் என்றால் என்ன என்பதை முழுமையாக புரிந்து கொண்டேன், ஒரு போதும் காதலில் தோற்றுவிட்டதாக யாரும் சொல்லக்கூடாது. காதல் என்ன தேர்வா..? – வெற்றியா, தோல்வியா என்று பார்ப்பதற்கு. நீ எனக்கு கிடைப்பாய் அல்லது கிடைக்காமல் போவாய். வாழ்க்கை சாய்ஸ்கள் நிறைந்தது. இதுவா, அதுவா… வேறு எதுவா..? இப்படித் தான் எதையாவது நினைத்து எனக்கு வாழ்வதற்குண்டான ஆசையை ஏற்படுத்துகிறேன்.
இலக்கியங்கள் அல்லது சினிமாக்கள் காட்டும் காதல் வேறு, நிஜ வாழ்க்கை காதல் வேறு. அடி விழ அடி விழ, நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் புலப்படுகின்றன.
“எழுதுங்கள் இவன் கல்லறையில் – அவள் இரக்கமில்லாதவன் என்று… ” பாடுங்கள் இவன் கல்லறையில் – இவன் பைத்தியக்காரன் என்று,” என்றெல்லாம் பாடிக் கொண்டு இருக்க முடியுமா?
போய் விட்டாய். அடுத்து என்ன செய்வது. பெற்றோர்களை காரணம் காட்டியே நிறைய காதலை துவம்சம் செய்கிறார்கள், காதலர்கள். நீயும் அதையே செய்தாய். நல்லது. ஆனால், உண்மை வேறு தானே?
ஏதோ ஒன்று, என்னை விட்டு உன்னை விலகும்படி தூண்டியது என்பதை நான் அறிவேன். காதலர்களுக்குள் கூட இனம் புரியாத வெறுப்பு வருவது ஆச்சர்யம் தான். காதல் கூட நாளாக நாளாக சலித்து தான் போகிறது.
ஆனால் அதை மறைக்க ஆயிரம் காரணங்கள், ஆயிரம் பொய்கள். முன்னுக்கு பின்னாக பேசுவது, ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை வீசுவது. என்ன செய்வது? பிறருக்கு வலிக்காமல் வாழ நமக்கு தெரியாதே. புரிந்து கொண்டு நானாக விலகினால் எனக்கது கௌரவம். இல்லையென்றால், ஏதேனும் சட்டச்சிக்கல்கள்… ஈவ்டீசிங்குகள்… வம்பு தும்புகள். வேண்டாமே!
யாருக்காகவும் யாரும் காயப்பட வேண்டாமே. ஏன் காயப்பட வேண்டும்? யாரையும் யாரும் கெட்டியாக பிடித்து கொள்ளவில்லையே. யார் இல்லாமலும் யாராலும் வாழ முடியும் என்பது தானே நிதர்சனம். உன் பாதை உனக்கு, என் பாதை எனக்கு. சிறந்த துணை உனக்கு அமையப் பெற்று இருக்கக்கூடும். வாழ்த்துக்கள்.
வாழ்க்கையில் எல்லாமே மாயை. இருப்பது போல் இருக்கும்; ஆனால் இருக்காது. நீ எனக்கு கிடைப்பது போல் இருந்தது; ஆனால் கிடைக்கவில்லை. நான் என் மனசை தேற்றிக் கொள்கிறேன். அது மிக நல்லது. சந்தோஷம் வந்தால் ஏற்று கொள்ளும் மனம், துக்கம் வந்தால் அதையும் ஏற்று கொள்ள தெரிய வேண்டும்.
உலகின் முதல் இழப்பு என்னுடையதல்ல. கடைசி இழப்பாகவும் என்னுடையது இருக்க போவதில்லை. பிறகேன் வருந்த வேண்டும். எல்லோருக்கும் நேருவதே எனக்கும் நேர்ந்துள்ளது. மகிழ்ச்சி.
Read more »

நிழற்படம்

நிழற்படம்
என் மௌனத்தின்
அர்த்தங்களே உன் பார்வைகளாய்
உன் விழி(கள்) பார்க்கும்
தூரங்களே என் வாழ்க்கைப்
பயணங்களாய்
கண்ணீரை என் விழிகள்
அறியும் முன்னே – துடைத்து விட
நீளும் உன் கரங்களே
கானலாய் போனது
இத்தனையும் ஓர்
இரவின் மௌனத்தைக் கிழித்து
கொண்டு விசும்பலாய் உன் குரல்
கேட்கும் துடைக்க முடியா
தூரத்தில் நான் உயிரில்லா
நிழற்படமாய்
உன் வீட்டு
சுவரில்.
Read more »

என்னுள் காதலெனும்

என்னுள் காதலெனும்
செடியை நட்டாய்
இன்று மரமாகி நிற்கும் நாம் காதலை
விட்டுப்பிரிய நினைக்கும்
உன்னைத் திட்டக் கூட
மனமில்லாமல் தவிக்கிறேன்
நான் வாடி மடிந்தாலும்…
நீ வாழ்க என்று….!
நாம் ஒன்றாய் கழித்த அந்த
நினைவுகளை என்
இதயத்தில் செதுக்கி விட்டேன்
என் கனவுகளை
கவிதைகளாக வரைந்து
கண்ணீரில் கரைக்கிறேன்
யாருக்கும் தெரியாமல்
என்னுயிரில் கலந்த
உன்னை மட்டும் பிரிந்து
செல்ல நினைக்காதே……
நானில்லாமல் நீயிருப்பாய்………
ஆனால்…..
நீயில்லாமல் நானிருக்க மாட்டேன்….!
Read more »

என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!

என் காதலை உன்னிடம் சொல்ல தயங்குகிறேன் உயிரே!
காரணம்; உனது அப்பா, அம்மா மற்றும் உனது உற‌வினர்களுக்கு பயந்தல்ல!!!
நீ என் காதலை மெளனம்மாக்கிவிடுவாயோ என்றுதான்!!!
ஆனால் மெளன‌மாக‌ இருக்கவும் முடிய‌வில்லை!
கார‌ண‌ம்; க‌டைசிவ‌ரையிலும் என் காத‌லை உன்னிட‌ம் சொல்லாம‌ல் போய்விடுவேனோ என்றுதான்!!!
அத‌னால்தான் சொல்லாமல் சொன்னேன் என் காத‌லை உன்னிட‌ம்!
ஆனால் நீயோ என் காதலை புரிந்தும் புரியாம‌ல் இருந்துவிட்டாயே உயிரே!
அத‌ர்க்கு கார‌ணம் என்ன‌???
Read more »

Monday, April 12, 2010

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்....What an X'planation..:-)

தொந்தியினால் ஏற்படும் பயன்கள்: ( FUN MSG)

1. கீழே குப்புற விழுந்தால் முகத்தில் அடிபட்டு மூக்கு உடையாமல் நம்மை
காப்பாற்றுகிறது.

2. சமுதாயத்தில் ஒரு மரியாதையை ஏற்படுத்துகிறது.. உதாரணமாக பெரிய பெரிய தொந்திகளை

கொண்ட போலீசாரை கண்டால் நமக்கு மரியாதை கலந்த பயம் ஏற்படும்.

3. சிறந்த பொழுதுபோக்கு சாதனமாக பயன்படுகிறது. உதாரணமாக வேலையில்லாமல் சும்மா

அமர்ந்திருக்கும் சமயத்தில் தொந்தியை மெதுவாக வருடிக்கொடுத்துக்
கொண்டிருந்தால் நேரம் போவதே

தெரியாது.

4. மல்லாக்க படுத்து இருந்தால் குழந்தைகள் சறுக்கு விளையாட்டு விளையாட
மிகவும் பயன்படும்.

மேலும் நமது செல்லப் பிராணிகளான பூனைகள் மற்றும் நாய்க்குட்டிகள் படுத்து
உறங்குவதற்கு

மிகவும் விரும்புவது குஷன் வசதி கொண்ட தொந்திகளையே.

பாடலாசிரியர் வைரமுத்து கூட,

நீ காற்று நான் மரம்…

என்ன சொன்னாலும் தலையாட்டுவேன்

என்று எழுதிய பாடலில் கீழ்க்கண்டவாறு சில வரிகளை சேர்த்திருந்தால் நன்றாக
இருந்திருக்கும்.

நீ பந்தி

நான் தொந்தி

என்ன போட்டாலும் உள்வாங்கிக்கொள்வேன்.

அரசியல்வாதிகளில் பலர் தொந்தியுடன் இருப்பதை நீங்கள் காணலாம். ஏனெனில்
ஒருவரது தொந்தியின்

அளவிற்கேற்ப அவரது புகழும் வளரும்.

தொந்தியார் குறைந்தால் தொண்டர் குறைவர்.

தொகுதி வளர்க்கும் உபாயம் அறிந்தே

தொந்தி வளர்த்தேன். தொகுதி வளர்த்தேனே.

என்பதே பல அரசியல்வாதிகளின் வேதவாக்கு.

தொந்தி ஏன் சதுரமாக அல்லது செவ்வகமாக இல்லாமல் உருண்டை வடிவத்தில்
இருக்கிறது? என்ற வினா

பலரது மனதில் எழும்.

தொந்தியானது தத்துவத்தின் சின்னமாகும்.

இந்த உலகமானது தொந்தியைப் போலவே உருண்டை வடிவமானது. இந்த வாழ்க்கையும்
வட்ட வடிவமானது.

இதை மனிதனுக்கு உணர்த்துவதற்காகவே இயற்கையானது மனிதனின் தொந்தியை உருண்டை
வடிவத்தில்

படைத்துள்ளது.

ஏழை ஒருநாள் பணக்காரன் ஆவான். பணக்காரன் ஒருநாள் ஏழை ஆவான். இதனை உணர்த்துவதற்காகவே

தொந்தியானது அந்த நிலவைப் போல அடிக்கடி தேய்ந்து வளருகிறது.

இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த தொந்தியை நாம்,

போற்றி வளர்ப்போம்! கண்டதையும் போட்டு வளர்ப்போம்!!

ஜெய் தொந்தி!
Read more »

கவிதை இல்லை.. கவிதை மாதிரி....- Read n feel...

கவிதை இல்லை.. கவிதை மாதிரி....
.
.
.

முன்பொரு மழை காலத்தில் ஒரு நீண்ட உரையாடல்..

டேய்.. உண்மைய சொல்லு, நீ எழுதுனதெல்லாம்
திருடுன கவிதைதானே..?
.

ச்சீ... நானே எழுதுனதுதாண்டி....

அப்டியா...??.

ஆமா..

எப்பலாம் கவிதை எழுதுவ...??.

மழை பெய்யும் போதெல்லாம் உன் ஞாபகம் வரும்...
அப்பலாம் உன்ன நெனச்சு எழுதுவேன்..
.

பார்ரா..!!! சரி, இப்பதான் மழை பெய்யுதே உடனே அழகா
ஒரு கவிதை சொல்லு பாப்போம்..
.

பக்கத்துலயே ரொம்ப அழகா ஒரு கவிதை நிக்கும்போது
இன்னொன்னு எப்டி சொல்றது..???!!!/.

அய்ய... பிளேடு....

போடி....

சரி சொல்லு, என்னலாம் ஞாபகம் வரும் உனக்கு...??.

ம்ம்........ ....................
............... ....................
.

என்னடா..? பயங்கரமா யோசிக்குற..??.

இருடி....

ஹ்ம்... இதான் காலக்கொடும...

சொல்றேன் கேளு...
மழை வரதுக்கு முன்னாடி ஒரு மண் வாசனை வரும் தெரியுமா??
.

ஆமா.

அப்பலாம் உன் தலைமுடி வாசனைதான் ஞாபகம் வரும்.

பாவி, அப்ப என் மண்டைல வெறும் மண்ணுதான் இருக்குன்னு சொல்றியா??
இதெல்லாம் நாங்க திருவிளையாடல் படத்துலயே பாத்துட்டோம்
வேற...??
.

சின்ன சின்னதா மழை தூறும்போது, உன் தெத்துப்பல்
தெரியுறமாதிரி சிரிப்பியே அது ஞாபகம் வரும்...
.

ப்ச்... அப்புறம்...?.

அந்த தூறல் தண்ணில விழும்போதெல்லாம் ஒரு வட்டம் வருமே..,
அதுல உன் கன்னக்குழி ஞாபகம் வரும்..!
.

ப்ச்...ப்ச்... வேற...??.

அதே தூறல் தரைல விழும்போது குட்டி குட்டியா சிதறுமே...
அப்பலாம் நீ அடிக்கடி ஒரு உச் கொட்டுவியே...?
.

ப்ச்....

ஆங்... இதான் இது ஞாபகம் வரும்..

பரவா இல்ல தேறிடுவ....

இடி, இடிக்குறப்பலாம், நா திருட்டு தம் அடிக்குறத பாத்துட்டு
கோவப்பட்டியே... அது ஞாபகத்துக்கு வரும்...
.

அதான் விட்டுடியே...அப்புறம்...??.

நா உன்கிட்ட லவ்வ சொல்றதுக்கு முதல் நாள்,
கண் சிமிட்டிகிட்டே ஒரு சிரிப்பு சிரிச்சியே...,

ம்...ம்...!?.

மின்னல் வரும்போதெல்லாம் அதான் ஞாபகம் வரும்.

அடப்பாவி, அவ்ளோ பயங்கரமாவா சிரிச்சேன்..??!!.

இல்ல.., அதுல ஒரு ஹை-வோல்டேஜ் கரண்ட் பாஸ் ஆச்சு
அதான் அப்டி சொன்னேன்...

ஹ...ஹ...ஹா...

அப்புறம் மழையெல்லாம் விட்டதுக்கு அப்புறம்
ஜில்லுன்னு ஒரு காத்து வீசும் தெரியுமா...?.

ஆமா...

அப்பலாம்.... ............................
....................... .............................

ம்.. சொல்லு....

இல்ல , அது வேணாம் விடு...

ஏன்..?

திட்டுவ.

திட்டமாட்டேன் சொல்லுடா .

நிச்சயமா...?

சத்தியமா.

ம்.... நாம ரெண்டு பேரும் ரொம்ப நேரம் பேசிக்கிட்டு இருக்குறப்ப ,
சில நேரத்துல நீ உன்னையே மறந்து இந்த மாதிரி உரசிகிட்டு நிப்ப...
அந்த ஸ்பரிசம்தான் ஞாபகம்தான் வரும் .

ச்ச்சீய்ய்.........

என்ன ஆச்சு...?

போடா..

ஓ... வெக்கப்படுரியா ..?

எனக்கும் மழை பெய்யுறப்பலாம் உன் ஞாபகம்தாண்டா வரும்.

ஹை.... எப்டி...???

மழை வரதுக்கு முன்னாடி வானம் கருப்பா ஆகும்ல..?!!
அப்பலாம் கருப்பா இருக்குற நீதான் ஞாபத்துக்கு வருவ..!! ஹ..ஹ..ஹா...

போடி கொரங்கு...

ஹ..ஹ..ஹா...

லூசு....

ஹ..ஹ..ஹா...

அரக்கி...

ஹ..ஹ..ஹா...

ஹி... ஹி...ஹி...

ஹ..ஹ..ஹா...









பிறிதொரு மழை நேரத்தில் ஒரு சிறிய உரையாடல்....
























































































































Sorry, I dont know who u are..?!!!
and.....just I cant remember u. leave me plz...
Bye.....
Read more »

நட்பு

“எவ்ளோ வருஷமாச்சுடா பாத்து !!! “
என சிலிர்ப்புடன்
பெயர் சொல்லி அழைக்கும்
நண்பனுடன் பேசுகையில்
பயமாய் இருக்கிறது
“எம் பேரு ஞாபகமிருக்கா”
என கேட்டு விடுவானோ ?


அப்பப்போ
போன் பண்ணுடா…
எனும் சம்பிரதாய விசாரிப்புக்கு
“கண்டிப்பா”
என நகர்வான்,
நான் கொடுக்காத நம்பரை
அவன்
எழுதிக் கொள்ளாமலேயே.


பொய்கள் தான்
உண்மையாகவே
நட்பைக் காப்பாற்றுகின்றன.
“நேற்று கூட பேச நினைத்தேன்”
என
யாரோ பேசிக் கடக்கிறார்கள்
செல்போனில்


அவளா இது ?
மீன் வாங்கிச் செல்லும்
பெண்ணிடம்
கொஞ்சமும் மிச்சமில்லை
கால் நூற்றாண்டுக்கு முன்
கண்களில் சிரித்த வசீகரம்.


நட்பு இருப்பதாய்
சொல்லிக் கொள்ளவேனும்
அடிக்கடி
தேவைப்படுகின்றன
வெள்ளிக்கிழமை பார்கள்.


கிராமத்து மௌன வீட்டின்
கம்பி அளியின் ஊடாக
நண்பனின்
புன்னகை முகம் தெரிகிறது.
இறந்து
வெகு நாட்களான பின்னும்.


“ஏழாயிரம் சம்பளம் டா மச்சி”
என
குதூகலித்துச் சொல்லும் நண்பனிடம்
சொன்னதில்லை
பல மடங்கு வாங்கும் நான்.
அவனிடம் மிகுந்திருக்கிறது நட்பு.


யாரை ரொம்பப் பிடிக்கும் ?
எதிர்பார்ப்புடன்
மகளைக் கொஞ்சுகையில்,
தோழியின் பெயரைச் சொல்லி
நட்பைப் பெருமைப்படுத்துகிறது
நர்சரி !
Read more »

அவளது கண்ணீரில் காதல்

பிரியமே,
எப்படிச் சாகடிப்பது
உன் நினைவுகளின்
இராவணத் தலைகளை ?
மழை பெய்து முடித்த
ஓர் ஈர இரவில்,
அக்ரகாரத்து ஓரத்தில்
அணையாமல் அலையும்
அகல்விளக்காய்,
சுருள் முடிகள் அலைய,
வெளிச்சம் விட்டு
வெளியேறுகின்றன
என் சிந்தனைகள்.
ரோஜாப் பூவின் கழுத்தை
மெல்லமாய் கிள்ளுவதை
காணும் போதெல்லாம்,
சைவக் கிளி
ஏன் பூவைக் கொல்கிறது
என்பாய்,
மருதாணித் தளிர்களை
உதடுகளில் இட்டாயா
என
உத்தரவு தருமுன்
உதடு வருடுவாய்.
இப்போதெல்லாம்
நான்
துளசிச் செடிமீது,
கூந்தல் ஈரத்தை
சொட்டும் போது
அதுவும் என்னோடு அழுவதாய்
அசாதாரணப் பிரமை எனக்கு.
என்
பூஜையறைக் கண்ணீரில்
சமீபகாலமாய்
பக்தியின் நதி பாயாமல்
காதலின்
கடலே கொந்தளிக்கிறது.
உதடுகள் இழுக்கும்
மந்திரங்களின் தேர்கள்
ஓர்
இயந்திரத் தனமாகவே
இயங்குகின்றன.
உன் பத்ரகாளியும்,
என் அக்ரகாரமும்
உனக்கும் எனக்கும் இடையே
பாலம் கட்ட
தடை போட்டபின்,
நிச்சயமற்ற பச்சையமாய்
சில
நிறக்கலவைகள் நம் வாழ்வில்,
வீற்றிருக்கும் காலங்கள்
என்
காயங்களை
ஆற்றியிருக்கக் கூடும்.
ஏன் தான்
போட்டுத் தொலைத்தாய் ?
உன் மழலைக்கு
என் பெயரை ?
Read more »

கண்ணீராய் வாழும் என் உயிரே

என் உயிரின் அத்தனை துளிகளிலும்
கண்ணீராய் வாழும் என் உயிரே

என்னை நிராகரிப்பது உன் உரிமை
நான் மௌனமாய் வெதும்பி நிற்பேன்
வேறொன்றும் செய்வதற்கில்லை

எப்படி வேண்டுமானாலும்
என்னை நீ நிராகரித்துக்கொள்
ஆனால் என் கண்கள் தொடும்
தொலைவிலேயே இரு

உன் மீதான என் பிரியம் என்பது
பைத்தியத்திலும் கேடுகெட்ட
பைத்தியமானது என்பதை அறிவாயா

எனக்குள் அதை ஊட்டிவிட்டவள் நீதானே
நெஞ்சில் எனக்கான அத்தனை
காதலையும் வைத்துக்கொண்டு
நிராகரிப்பதாய் உதடுகளால் நடிக்கிறாய்

ஒன்று மட்டும் புரிந்துகொள்
நீ விரும்பாத எதையும்
நான் விரும்பவும் மாட்டேன்
நீ வாழவே நான் வாழ்வேன்
காதலிக்கிறேன் உன்னை எப்போதும்
Read more »

நீதிக் கதைகள்...

அது பல படுக்கைகள் கொண்ட பெரிய மருத்துவமனை. . அவற்றில் ஒரு அறையில் இரு தீவிர நோயாளிகள். ஒருவரை இன்னொருவர் பார்த்தது இல்லை. இருவருக்குமிடையே ஒரு தடுப்புச் சுவர். ஒருவர் படுக்கை சன்னல் அருகில். இன்னொருவருக்கு சன்னல் கிடையாது. எப்போதாவது வந்து செல்லும் மருத்துவச் செவிலியைத் தவிர… தனிமை.. தனிமை.. தனிமை..!

சன்னல் படுக்கை நோயாளிக்குப் புற்றுநோய். இன்னொருவர் கடும் எலும்பு முறிவு நோயாளி. நாளடைவில் நட்பாகிவிட்டனர். ஒருமுறை எலும்பு நோயாளி சன்னல் நோயாளியிடம் சொன்னார்..

"உனக்காவது பொழுது போக்க, ஒரு சன்னல் இருக்கிறது.. எனக்கு அதுகூட இல்லை..!"

கவலைப்படாதே நண்பா.. நான் சன்னலூடே என்னென்ன காண்கிறேனோ, அவ்வளவையும் உன்னிடம் விவரிக்கிறேன். இதை ஒரு ஒப்பந்தமாகவே கடைப்பிடிப்பேன்..!

அன்று முதல் சன்னல் நோயாளி, தான் கண்ட காட்சிகளை சுவைபட தன் நண்பனுக்குக் கூறலானார்..

" நண்பா.. சன்னலுக்கு வெளியே ஒரு பெரிய ஏரி.. நடுவில் சிறு தீவு.. ஏரியில் படகுகள் மிதக்கின்றன.. ஏரிக்கரையில் அழகான பூங்கா..! காதலர்கள் தன்னை மறந்து கதைகள் பேசுகின்றனர்..!"
எலும்பு நோயாளிக்கு அப்படியே காட்சிகள் மனக்கண்ணில் விரியும்..

சன்னல் நோயாளி இன்னொரு நாள் சொல்வார்..

"ஏரிக்கரை ஓரமாக ஒரு சாலை.. அதில் மணப்பெண் அழைப்பு ஊர்வலம் போய்க்கொண்டிருக்கிறது.. குழந்தைகள் மகிழ்ச்சியுடன் ஓடித் திரிகின்றன. மணப்பெண்ணிடம் தோழி ஏதோ சொல்கிறாள்.. மணப்பெண் முகத்தில் அப்படி ஒரு வெட்கம்..!"

ஊர்வல அரவங்கள் எதுவும் எலும்பு நோயாளிக்கு கேட்கவில்லையாயினும் நாதசுரமும், தவிலும் ஒலிக்க ஊர்வலம் போகும் காட்சியை நன்கு அனுபவிப்பார்..

ஒருநாள் சன்னல் நோயாளி செத்துப்போனார்..

மீண்டும் எலும்பு நோயாளிக்கு வெறுமை… ஒருநாள் செவிலி வந்தபோது, தன் படுக்கையை சன்னல் ஓரமாக மாற்றித்தரும்படி கேட்டுக்கொள்ள, அவ்வாறே செய்யப்பட்டது.

இனி எனக்கு நன்கு பொழுது போகும் என்று எண்ணியவாறே.. தன் எலும்பு முறிவு வலியையும் பொருட்படுத்தாமல் மெல்ல தன் உடலை உயர்த்தி சன்னல் வழியே நோக்க…. அங்கே பெரிய சுவர்..! வேறு எதுவுமே இல்லை..!

அப்படியானால் சன்னல் நோயாளி சொன்ன கதைகள்…?

மறுநாள் செவிலி வந்தவுடன், நடந்தவற்றை எலும்பு நோயாளி கூறினார்..

செவிலி, எலும்பு நோயாளிக்கு ஊசி மூலம் மருந்தை ஏற்றியபடியே சொன்னாள்..

"நீங்கள் பார்க்கும் சுவர் கூட அவருக்கு தெரிந்திருக்காது.. புற்றுநோயின் தாக்கத்தால் அவர் பார்வையை எப்போதோ இழந்துவிட்டிருந்தார்..!"


நீதி :
தன் துன்பங்களை


மறைத்துக்கொண்டு மற்றவர்களை உற்சாகப்படுத்தும் மிகச்சில

மனிதர்கள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள்..
Read more »

காதல் செய்.

காதல் எப்போதுமே
புரியாதவைகளின் புதையல் தான்.
கேள்விகளே
விடைகளாவது இங்கு மட்டும் தான்.
தெரியவில்லை என்ற
பதில் தான்
அதிகமாய் இங்கே பரிமாறப்படும்.
நடக்குமா என்னும்
வினாக்களுக்கும்,
முடியுமா எனும்
முகப்பாவனைகளுமே
காதலின் வழியெங்கும்.
ஒவ்வோர் மனசுக்கும்
தன் காதல் மட்டுமே
தெய்வீகம்,
மற்றவை எல்லாம்
மோகத்தின் வேஷங்கள்.
பார்க்குமிடமெல்லாம்
பிரமிடுகள் எழுந்தாலும்,
எங்கேனும் முளைக்கும்
ஓர் முளையை நம்பியே
நடக்கும்
இந்த பரிசுத்த ஆடுகள்.
கவிதைகளின் முதல் தளம்
பெரும்பாலும்
காதலின் அடித்தளம் தான்.
பிரபஞ்சம் சுருங்கினாலும்
தன் காதல் மட்டும்
தீர்க்கக் கோடாய் மாறியேனும்
தப்பிக்குமெனும்
தீர்க்கமான நம்பிக்கை,
காதல் கரைகளில் கிளிஞ்சல்களாகும்.
இது,
உதடுகள் திறந்து வைத்து
உணர்வுகளில்
பூட்டிட்டுக் கொள்ளும்
உற்சாக ஊற்று.
புலன்களுக்குச்
சொடுக்கெடுக்கும் பூக்கூட்டம்,
காதல்,
மௌனங்கள்
தினம் நடத்தும் பொதுக்கூட்டம்.
காதலியுங்கள்,
காதல்
நாட்டிய மலர்களின் நந்தவனம்.
தாண்டி வந்த திருப்தி
தோல்வியிலும் தொடரும்.
Read more »

காதல் தோல்வி

இனியவளே!
காலை
கதிரவன்
கண் விழிக்கும்
முன்னே
காளையவன்
கண் விழிக்க...
சொந்தம்
கொண்ட
தென்றல்
இல்லாத
சோக சோலையிலும்
அவன்
மோகத்தில் இருக்க...
எதுகையும்
எதார்த்தமாக
மோனையும்
மொத்தத்தில்
அவன்
கவிதைகளில் இருக்க...
ஆனால்
கட்டும்
புடவையாக
காதலை
(ஏ)மாற்றும்
காதலிகள் இருக்க...
உலகம்
நிற்கும் வரை
காதல்
தோல்விகள் இருக்கும்!
Read more »

காதல் தோல்வி -2

நீ அழைக்கும் போது
கடவுள் போல வந்துவிடுவேன்
எங்கிருந்தாலும்!

நீ சொல்லும் போது
அடியாள் போல செய்துவிடுவேன்
எந்தவேலையையும்!

நான் நினைத்துக் கொண்டிருந்தேன்
நாம் காதலித்துக் கொண்டிருப்பதாய்!
பிறகு தான் புரிந்தது
நான்மட்டும் காதலித்துக் கொண்டிருப்பது!


நம்பமுடியவில்லை

மாலை வேளையில் தூக்கியெரியும்
நீ சூடிவாடிய மல்லிகையுடன்
என்காதலும் குப்பைக்கு போனதை
என்னால் இன்னும் நம்பமுடியவில்லை!
Read more »

நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா!

ஒன்பதரை மணி காலேஜிக்கு
ஒவ்வொருத்தனா கெளம்பும் போது
ஒருத்தன் மட்டும் தூங்கிகிட்டிருப்பான்
ஒன்பது இருபது ஆகுற வரைக்கும்...
அடிச்சி புடிச்சி கெளம்புறப்போ
அரை குறையா குளிச்சதுண்டு
பத்து நிமிஷ பந்தயத்துல
பட படன்னு சாப்டதுண்டு
பதட்டதோட சாப்பிட்டாலும்
பந்தயத்துல தோத்ததில்ல,
லேட்டா வர்ற நண்பனுக்கு
பார்சல் மட்டும் மறந்ததில்ல!
விறுவிறுன்னு நடந்து வந்து
காலேஜ் Gate நெருங்குறப்போ
'வெறுப்படிக்கிதுடா மச்சான்'னு
ஒருத்தன் பொலம்பி தொலச்சாக்கா,
வேற எதுவும் யோசிக்காம
வேகவேகமா திரும்பிடுவோம்
வெட்டியா ரூம்ல அரட்டை அடிக்க,
இல்ல தியேட்டர்ல படம் பாக்க!
'கஷ்டப்பட்டு' காலேஜிக்கு போனா
கடங்கார professor கழுத்தறுப்பான்...
assignment எழுதாத பாவத்துக்கு
நாள் முழுக்க நிக்கவச்சி தாக்கறுப்பான்!
கேலி கிண்டல் பஞ்சமில்ல,
கூத்து கும்மாள குறையுமில்ல,
எல்லாருக்கும் சேத்துதான் punishmentன்னா
H.O.Dய கூட விட்டதில்ல!
ஈ அடிச்சான் காபி இந்தபக்கம்னா
அத அடிப்பான் காபி அந்தபக்கம்...
ஒருத்தன் மட்டும் படிச்சிட்டு வந்து
ஒன்பதுபேர் பாஸ் ஆனதுண்டு!
பசியில யாரும் தவிச்சதில்ல
காரணம் - தவிக்க விட்டதில்ல...
டீக்கடையில கடன்வச்சி குடிச்சாலும்
சரக்கடிக்க பஞ்சமே வந்ததில்ல!
அம்மா ஆசையா போட்ட செயினும்
மாமா முறையா போட்ட மோதிரமும்
fees கட்ட முடியாத நண்பனுக்காக
அடகு கடை படியேற அழுததில்ல ...
சட்டைய மாத்தி போட்டுக்குவோம்
சாதி சமயம் பாத்ததில்ல,
மூஞ்சிமேல காலபோட்டு தூங்கினாலும்
முகவரி என்னன்னு கேட்டதில்ல!
படிச்சாலும் படிக்கலன்னாலும்
பிரிச்சி வச்சி பாத்ததில்ல...
அரியர்ஸ் வெச்சாலும் வெக்கலன்னாலும்
அந்தஸ்த்து பாத்த ஞாபகமில்ல!
வேல தேடி அலையுறப்போ
வேதனைய பாத்துப்புட்டோம்
'வெட்டி ஆபிஸர்'னு நெஜமாவே
மாறி மாறி சிரிச்சிகிட்டோம்!
ஒருத்தன் மட்டும் சம்பாதிக்க ஆரம்பிச்சு
ஒன்பது பேரும் உக்காந்து சாப்பிட்டப்போ
மனசு கட்டபொம்மனா நண்பனுக்கு நன்றி சொல்ல
கண்ணு எட்டப்பனா கண்ணீர் சிந்தி காட்டி குடுக்கும்...
பக்குவமா இத கண்டும் காணாம
நண்பன் தட்டி கொடுக்க நெனைக்கிறப்போ
'சாப்பாட்ல காரம்டா மச்சான்'னு
சமாளிச்சி எழுந்து போவோம்...
நாட்கள் நகர,
வருஷங்கள் ஓடுது,
எப்போதாவது மட்டுந்தான் இ-மெயிலும் வருகுது
"Hi da machan... how are you?" வுன்னு...
personal loan interest,
housing loan EMI,
share market சருக்கல்,
appraisal டென்ஷன்,
இந்த கொடுமையெல்லாம் பத்தாம
'இன்னிக்காவது பேச மாட்டாளா?' ன்னு
இஞ்சிமறப்பா போல ஒரு காதல்,
.
.
.
எப்படியோ வாழ்க்க ஓடுது ஏடாகூடமா,
நேரம் பாக்க நேரமில்ல போதாகாலமா!
இ-மெயில் இருந்தாலும்
இண்டர்னெட் இருந்தாலும்
கம்பெனியில ஓசி phone இருந்தாலும்
கையில calling card இருந்தாலும்
நேரம் மட்டும் கெடைக்கிறதில்ல
நண்பனோட குரல கேக்க
நெனச்சாலும் முடியறதில்ல
பழையபடி வாழ்ந்து பாக்க!
அலைபேசி இருந்தும் அழைக்க முடியாம போனாலும்
orkut இருந்தும் scrap பன்ன முடியாம போனாலும்
'available' ன்னு தெரிஞ்சும் chat பன்ன முடியாம போனாலும்
'ஏண்டா பேசல?' ன்னு கோச்சிக்க தெரியல..
இத பெரிய பிரச்சனையா யோசிக்கவும் முடியல!
கல்யாணத்துக்கு கூப்பிட்டு
வரமுடியாமா போனாலும்,
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
Read more »

அன்புத் தோழி

சிரித்தால் சிரிப்பதற்கு
பலர் உண்டு ..
பொழுது போக்கவே
கூடி சிரிக்கவும்
பலர் உண்டு..
இன்பத்தை மட்டுமே
பகிர முடிந்தது அங்கு !!
இதயத்தை பகிர்ந்துகொள்ள
நீ மட்டும் தான்
என் அன்புத் தோழி!
சுயம் மறந்து
நேசிப்பவர் நலம் நாடிய
பல தருணங்களில்
ஆழமான நட்பு நம்முள் அரங்கேறியது !!
எதையும் இழக்கச் சம்மதிக்கும்
ஆழமான அன்பினால்
வேறூன்றியது அது !!!
எத்தனை எத்தனை
உறவுகள் வந்தாலும்
உள்ளம் திறந்து உண்மை வடித்து
உணர்வுகள் கொட்டி தோள் சாய்ந்திட
உனையே நாடும் என் மனம் !!!!!
வருடங்கள் பல கடந்து
சந்திக்கும் போதும்சிறுதயக்கமும் இன்றி
உள்ளன்போடு உறவாடும்
அன்யோன்யம்உன்னிடம் மட்டுமே !
சுகத்தைப் பகிர மறந்தாலும்
சோகத்தைப் பங்குபோடத் துடிக்கும்
என் உயிர்த் தோழி!
நெஞ்சில் நன்றி சுரக்க
கண்ணில் நீர் வடிய
கை கூப்புகிறேன் மனதில்...
உன் நட்பும்
உன் நட்பின் பாதிப்பும்
வாழ்நாள் முழுதும்
என்னோடு நடை போடும் என்று
நிணைத்துக் கொண்டிருந்தேன்
ஆனால் பாதியிலேயே போய்விட்டாயே
என் தோழி??????
                              
           (என்னை விட்டும் இந்த உலகத்தை விட்டும் பிரிந்த என் தோழிக்காக)
Read more »

என்ன செய்தாய் என்னை..!!

என்ன செய்தாய் என்னை..!!
நினைக்கும்
பொருளில்
எல்லாம்
உந்தன்
நினைவுகள் தானடி

உச்சரிக்கும்
சொல்லில்
எல்லாம்
உந்தன்
பெயர்
ஓசை தானடி

சுவாசிக்கும்
காற்றில்
எல்லாம்
உந்தன்
வாசனை தானடி

நீ என்னுடன் தான் இருக்கிறார்
என்றாலும்
எனக்குள் ஏனடி
இவ்வளவு
போராட்டம்"

உன்னை
அன்றி
நாட்கள்
ஒவ்வொன்றும்
நரகமாய் கழிகின்றன"

கண்களை
மூடினால் கூட
இமைகளுக்கு
நடுவில் நிற்கிறாய்"

என்ன செய்வது என்று தெரியாமல் உன்னிடமே கேட்கிறேன்
என்ன செய்தாய் என்னை....!!!!
Read more »

Saturday, April 10, 2010

காதல் வலிகள்..!!!!!!


நான் உன்னை காதலிக்கிறேன்
என்பதை தவிர எல்லாவற்றையும்
உன்னிடத்தில் சொல்லிவிட்டேன்
என்றே நினைக்கிறேன்......

நீ என்னை தானே காதலிக்கிறாய்
என்பதை தவிர எல்லாவற்றையும்
நீ என்னிடத்தில் இருந்து கேட்டு
தெரிந்து கொண்டாய் என்றும் நினைக்கிறேன்....

என் கவிதைகளை எல்லாம் நீ
படிக்கும் போது சந்தோசமாகத்தான் இருக்கிறது...

ஆனால் படித்து முடித்ததும் நீ
உன் ஒவ்வொரு கவிதைக்கு பின்னும்
யாரோ ஒரு பெண் இருக்கிறாள்
அது யாரென்று என்னிடத்திலேயே
கேட்கிறாய் எதுவுமே தெரியாதது போல்
என் முன்னால் அமர்ந்து கொண்டு.......
அது தானடி வலிக்கிறது அடி மனதில்...!!!

தோழிகளோடு ஆரவாரமாக பேசிக்கொண்டு
வரும் நீ என்னை கடக்கையில் மட்டும்
அமைதியாகி விடுகிறாயே...!!!
அதை பார்த்து தான் உறுதி செய்து கொள்கிறது
என் மனம் நீயும் என்னை காதலிக்கிறாய் என்று...

நீ என்னை கடக்கும் போதெல்லாம்
உன் கொலுசு கூட என் மீது இரக்கப்பட்டு
சில வார்த்தைகளை சிணுங்கி போகிறது
ஆனால் நீ........ ??????

ஒவ்வொரு சந்திப்பின் போதும்...
உன் புன்னகையை சிதறவிட்டு...
என் இதயத்தை அல்லவா
அள்ளிக்கொண்டு போகிறாய்.....!!!!

முற்றுப்புள்ளி வைக்காமல் தான்
முடிக்கிறேன் என் ஒவ்வொரு கவிதையையும்
உயிர் உள்ள காலம் வரை....
உன் நினைவு வற்றவா போகிறது என்னிலிருந்து.....!!!!!!
Read more »

தோழி...



காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி...?!
*******************************************
தோழி...
தங்கைக்கும்...
காதலிக்கும்...
இடைப்பட்டவள்...!!
தோழி...
நெருக்கத்துக்கும்..
தூரத்துக்கும்..
இடைப்பட்டவள்...?!
*********************************************
தோழியை கண்டதும்...
நெருக்கமாய் அமர்வாள் காதலி...!?
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி..!
*************************************************
பிறந்தநாள் வாழ்த்து...
தொலைபேசியில் சொல்வாள் காதலி..!
கைபிடித்து குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழியும்..?!
***************************************************
என் காதலுக்காக அவள் வாதிடுவாள்
என் சாதியோடு...?!
அவள் காதலுக்காக நான் வாதிடுவேன்
அவள் அப்பாவோடு..?!
*****************************************************
வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா...
சோறு கொடுத்து அனுப்புவாள்...
அப்பா..
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்...
காதலி..
முத்தம் கொடுத்து அனுப்புவாள்..
தோழிதான்...
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்..?!
****************************************************
Read more »

மௌன காதலனே.....


மௌன  காதலனே.....

வாய் தவறிய வார்த்தையாகவோ......
கோவத்தால் வந்த வார்த்தையாகவோ- இல்லை
தெரியாமல் சொன்ன வார்த்தையாகவோ....
எப்படி சொன்னாலும் சம்மதமே
பொய்யாவது சொல்லேன் நீ என்னை
நேசிக்கிறாய் என்று....
உன் மொவ்னத்தில் சிக்கித் தவிக்குதடா என்-
காதலும்,,,,,,,உணர்வுகளும்.........
என் மொவ்னம் சொல்ல முடியாத காதலை
என் மரணம் சொல்லக்கூடும்......
நீ இல்லாமல் நான் தவிக்கிறேன்...துடிக்கிறேன் ......
Read more »

தேவதைக்கு நெருக்கமானேன்...!!

கவனம் சிதறும் படி
ஆடை உடுத்தும் பெண்களுக்கு இடையே..
நேர்த்தியாய் உடுத்தியதால் கவனம் ஈர்த்த
அழகி நீ...!!

சிரிக்க தெரிந்தவர்கள்
கடவுளுக்கு நெருக்கமாகிறார்கள்
என்பார்கள்...
ஆனால் நானோ உன்னை
சிரிக்க வைத்து
தேவதைக்கு நெருக்கமானேன்...!!

அழகாய் இயற்க்கை காட்சி கண்டால்
இப்படி சொல்லுவாய் நீ
"அடடா என்ன ஒரு அழகு என்று...!?"

அழகி உன்னை கண்டதும்
இயற்க்கை இப்படி அதிசயிக்கும்..
அடடா எனக்கு போட்டியா..? என்று...!!"
Read more »

என் தோழனே!

சோகமெனில் உன்தோளில் சாய்ந்து

அழுது தீர்த்துக்கொள்வேன்…

மகிழ்ச்சியெனில் உன்

விரல்கோர்த்து உயிர் மலர சிரித்துக்கொள்வேன்…

உன்னுடனிருக்கும்

ஒவ்வொருநிமிடங்களும்

தாய்மடியில்நிம்மதியாய்

உறங்கும்குழந்தையாய்

நானிருந்தேன்..

தங்கத்தில் வேலியொன்று

என் கழுத்தில் ஏறியதால்

உன்னைப் பிரிந்து இன்று

வெளியூர் செல்கிறேன்…

வழியனுப்ப வந்த

சொந்தங்களின் நடுவே

தோழி என்னை

பிரியவும்மனமில்லாமல்

வேறுவழியும் தெரியாமல்

தவிப்புடன் கன்னம்நனைக்கும்

கண்ணீரைமறைத்தபடியே

மெளனித்துகையசைக்கிறாய் நீ..

உன்னைவிட்டு

நகரத்துவங்குகிறது

இந்த இரயிலும்

என்வாழ்க்கையும்…
Read more »

நான் அறியா என் தோழன்


விரல் கோர்த்து விளையாடிய

தோழன் இல்ல...

விழி நோக்கி சிரித்த

தோழன் இல்ல....

அருகில் அமர்ந்து

தேற்றியவனும் இல்ல...

ஆபத்தில் வந்து

உதவியவனும் இல்ல..

கேளியாய் என்னை

அடித்தவனும் இல்ல...

வாய் பேசி சண்டை

போட்டவனும் இல்ல...

நீ யாரென்று நான்

அறியவும் இல்ல...

உன்னிடம் பகிராத

விசயங்கள் இல்ல...

இருப்பினும்

இப் பிரபஞ்சத்தில் நான்

நட்பு கொள்ள உன்னைத் தவிர

யாரும் இல்ல................
Read more »

இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

இஞ்சினியர்கள் மேனேஜரிடம் கேட்க விரும்பும் பத்து கேள்விகள்

1. ராத்திரி 10 மணிக்கு கூட எங்களுக்கு பர்சனல் ஒர்க் வரக்கூடாதுனு எதிர்பார்க்கறீங்க... ஆனா சாயந்திரம் 5 மணி ஆனவுடனே உங்களுக்கு மட்டும் எப்படி பர்சனல் ஒர்க் வந்துடுது...?
2. அது எப்படி நாங்க சொல்லி உங்களுக்கு ஏதாவது புரியலைனா Dont make it too complicatedனு சொல்றீங்க... ஆனா நீங்க சொல்லி எங்களுக்கு புரியலைனா He is Dumbனு சொல்றீங்க..?
3. அது எப்படி Week end எங்களுக்கு வேலை கொடுத்துட்டு சனிக்கிழமை நீங்க வீட்டுக்கு கிளம்பும் போது Happy Weekend னு கூச்சப்படாம சொல்லிட்டு போக முடியுது..?
4. அது எப்படி உங்களுக்கு ஒரு அப்ளிகேஷன் சரியா வேலை செய்யலைனா, அப்ளிகேஷன்ல பிரச்சனைனு சொல்றீங்க... அதே எங்களுக்கு வேலை செய்யலைனா, உனக்கு அப்ளிகேஷன் தெரியலைனு சொல்றீங்க..?
5. ஏதாவது நல்ல நாள் வந்தா ஏதோ உங்க வீட்ல மட்டும் விசேஷம் மாதிரி எல்லா வேலையையும் எங்க தலைல கட்றீங்களே. ஏன் எங்க வீட்லயும் விசேஷம் இருக்கும்னு உங்களுக்கு தெரிய மாட்டீங்குது..? நாங்க என்ன டெஸ்ட் ட்யூப் பேபியா...
6. உங்களுக்கு ஊதிய உயர்வு வரலைனா மட்டும் கம்பெனி ரொம்ப மோசமாகுதுனு சொல்ற நீங்க, எங்களுக்காக மட்டும் பேச மாட்றீங்க....?
7. ஏதாவது ஒரு முக்கியமான மெயில் அனுப்ப நீங்க மறந்தா மட்டும், I was very busy in some other issueனு சொல்றீங்க. அதே நாங்க மறந்தா, you should concentrate on workனு சொல்றீங்க...?
8. ஆபிஸ் நேரத்துல நீங்க ஃபோன் பேசிட்டு இருந்தா மட்டும், அது ஏதோ தலை போற விஷயம் மாதிரி எடுத்துக்கறீங்க, அதே நாங்க பண்ணா வேலையை சரியா செய்ய மாட்றானு சொல்றீங்க...?
9. சாயந்திரம் 5 மணிக்கு நீங்க வீட்டுக்கு போறது தப்பில்லை, ஆனா அப்ப நாங்க ஒரு டீ குடிச்சிட்டு வர போனா மட்டும் ஏதோ கொலை குத்தம் செய்யற மாதிரி பாக்கறீங்க...?
10. காலைல வந்ததுல இருந்து ICICI Direct,gmail ,Geogit, Sharekhanனு செக் பண்ணிட்டு இருக்கீங்க. அதே நாங்க மதியம் சாப்பிட்டு வந்து மெயில் செக் பண்ணா மட்டும் Don't use company resources for your personal workனு சொல்றீங்க...?

ஏன் சார் ஏன்....

இத்த தான்...

திருக்குறள்ள

யாதெனின் யாதெனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்
...

ஆப்பீசுக்கு போனா ஆணிபுடுங்காம சும்மா இருப்பதே சுகம்னு வள்ளுவர் எப்பவோ எழுதிவச்சுட்டாரு.
இந்த டேமேஜர்களுக்குத்தான் இது தெரிய மாட்டேங்குது..
Read more »

உன் பிரிவை விட. . .

உன் பிரிவை விட. . .

நீ பிரியும்
தருணத்தில் வழியனுப்ப
மனமில்லாமல்
பேசுவதற்கு வார்த்தைகள்
இல்லாமல்
நான் தவித்து நின்றேன்.

கன்னம் நனைக்கும்
கண்ணீருடன் நீ
சொன்னாய்.
"உனக்கு வர்ற
மனைவி கொடுத்துவச்சவடா"
என்று.

உன் பிரிவை விட
அதிகமாய்
வலிக்கிறது
உன் வாழ்த்து.
Read more »

தேநீர் இடைவேளை

விட்டு  கொடுப்பது   தான் 
நட்பு  என்றாலும்
என்னை  விட்டு  கொடுக்காதது 
உன்  நட்பு !!!
பாட  வகுப்பில் 
பாடம்  தெரிந்ததை
விட  உன்  பாசம்  தான்
மிகவும்  அறிந்தேன் !!!
பள்ளி  முடிந்து  செல்லும்
பாவையர்  கூட்டத்தில்
நான்  பார்த்த  பெண்ணையே
நீயும்  பார்த்த  பொழுது
நம்ப  முடியாமல் 
வியந்து  இருக்கிறேன் !!
நமது  ஒற்றுமையை
எண்ணி !!!!!:-)
மறக்க  முடியுமா
மகிழ்ச்சி  கொண்ட
மாலை  நேரங்களை ?
வீடு  செல்லும்  ரோடும்
விடுமுறை  நாளும் ,
கடி  போடும்  கணித  வகுப்பும்,
கால்  பந்து  மைதானமும்,
அடி  தடி  நிறைந்த
ஆண்டு  விழாவும்,
பருவத்தில்  சேர்ந்த
பதினோராம்   வகுப்பும்,
இஷ்டமில்லாத  இயற்பியலும்,
வேக  வைக்கும்  வேதியலும்,
கடல்  தாண்டி  வந்தாலும்
கண்  முன்னே  தெரிகிறதடா நண்பா !!!
பள்ளி பருவம்  பால்  போல
இனிக்கிறதடா நண்பா !!!

காதல் வழிந்த 
கல்லூரி  நாட்களும் ,
எட்டுக்கு  எட்டடி  அறையில்
எழு  பேர்  தூங்கியதும் ,
நானா ? நீயா ? என
போட்டியிட்ட பொய்  சண்டைகளும் ,
பாதி  பாதி  என
பிரித்து  உண்ட 
பார்சல்  சாப்பாடும் ,
ஆயுள்  உள்ள  வரை
இருக்குமடா   மனதில் !!
அழிக்க  முடியவில்லை
மிகவும்  எளிதில் !!!

கண்ணுக்கு  எட்டாத  தூரத்தில்
கை  கட்டி  வேலை  பார்த்தாலும் ,
ஆண்டுக்கு  ஒரு   முறையாவது
கண்டு  விடலாம்  நண்பர்களை  என்ற
நம்பிக்கையில்  நாளும் வாழ்கிறேன் !!
அவசர  உலகத்திலும் 
அழியாத  என் நட்பினை ,
அசை போடுகிறேன்!!!!!!
சொன்னது  கொஞ்சம் !!
நெஞ்சில்  உள்ளது
விண்ணை  மிஞ்சும் !!
நரகமாகிவிட்ட  நாட்களில்
மனதை  குளிரவும்
வைக்கிறது  என்  இனிய
தேநீர்  இடை  வேளை !!!!
Read more »