விட்டு கொடுப்பது தான்
நட்பு என்றாலும்
என்னை விட்டு கொடுக்காதது
உன் நட்பு !!!
பாட வகுப்பில்
பாடம் தெரிந்ததை
விட உன் பாசம் தான்
மிகவும் அறிந்தேன் !!!
பள்ளி முடிந்து செல்லும்
பாவையர் கூட்டத்தில்
நான் பார்த்த பெண்ணையே
நீயும் பார்த்த பொழுது
நம்ப முடியாமல்
வியந்து இருக்கிறேன் !!
நமது ஒற்றுமையை
எண்ணி !!!!!:-)
மறக்க முடியுமா
மகிழ்ச்சி கொண்ட
மாலை நேரங்களை ?
வீடு செல்லும் ரோடும்,
விடுமுறை நாளும் ,
கடி போடும் கணித வகுப்பும்,
கால் பந்து மைதானமும்,
அடி தடி நிறைந்த
ஆண்டு விழாவும்,
பருவத்தில் சேர்ந்த
பதினோராம் வகுப்பும்,
இஷ்டமில்லாத இயற்பியலும்,
வேக வைக்கும் வேதியலும்,
கடல் தாண்டி வந்தாலும்
கண் முன்னே தெரிகிறதடா நண்பா !!!
பள்ளி பருவம் பால் போல
இனிக்கிறதடா நண்பா !!!
காதல் வழிந்த
கல்லூரி நாட்களும் ,
எட்டுக்கு எட்டடி அறையில்
எழு பேர் தூங்கியதும் ,
நானா ? நீயா ? என
போட்டியிட்ட பொய் சண்டைகளும் ,
பாதி பாதி என
பிரித்து உண்ட
பார்சல் சாப்பாடும் ,
ஆயுள் உள்ள வரை
இருக்குமடா மனதில் !!
அழிக்க முடியவில்லை
மிகவும் எளிதில் !!!
கண்ணுக்கு எட்டாத தூரத்தில்
கை கட்டி வேலை பார்த்தாலும் ,
ஆண்டுக்கு ஒரு முறையாவது
கண்டு விடலாம் நண்பர்களை என்ற
நம்பிக்கையில் நாளும் வாழ்கிறேன் !!
அவசர உலகத்திலும்
அழியாத என் நட்பினை ,
அசை போடுகிறேன்!!!!!!
சொன்னது கொஞ்சம் !!
நெஞ்சில் உள்ளது
விண்ணை மிஞ்சும் !!
நரகமாகிவிட்ட நாட்களில்
மனதை குளிரவும்
வைக்கிறது என் இனிய
தேநீர் இடை வேளை !!!!
Saturday, April 10, 2010
தேநீர் இடைவேளை
Posted by MuthuRaj on 2:22 AM

