Saturday, April 10, 2010

தோழி...



காதலியை பார்க்க போகும் முன்
கைபிடித்து நகம் வெட்டிவிட்டு
புன்முறுவல் செய்வாள்
தோழி...?!
*******************************************
தோழி...
தங்கைக்கும்...
காதலிக்கும்...
இடைப்பட்டவள்...!!
தோழி...
நெருக்கத்துக்கும்..
தூரத்துக்கும்..
இடைப்பட்டவள்...?!
*********************************************
தோழியை கண்டதும்...
நெருக்கமாய் அமர்வாள் காதலி...!?
காதலியை கண்டதும்....
புன்னகைத்து விலகி நடப்பாள் தோழி..!
*************************************************
பிறந்தநாள் வாழ்த்து...
தொலைபேசியில் சொல்வாள் காதலி..!
கைபிடித்து குலுக்கி சொல்வாள்
என் அம்மாவோடு சேர்ந்து தோழியும்..?!
***************************************************
என் காதலுக்காக அவள் வாதிடுவாள்
என் சாதியோடு...?!
அவள் காதலுக்காக நான் வாதிடுவேன்
அவள் அப்பாவோடு..?!
*****************************************************
வெளியூர் வேலைக்கு செல்லும்போது..
அம்மா...
சோறு கொடுத்து அனுப்புவாள்...
அப்பா..
செலவுக்கு கொடுத்து அனுப்புவார்...
காதலி..
முத்தம் கொடுத்து அனுப்புவாள்..
தோழிதான்...
நம்பிக்கை கொடுத்து அனுப்புவாள்..?!
****************************************************