எனது
வயது வளமை
கனவு கல்வி
உறவு நட்பு
உயரம் எடை
தொடர்பு தொழில்,
இன்னும்
ஏதேதோ ஆரய்ந்து
தயங்குகிற உன்னை,
உயிராய்க்கொள்ள
உன் ஒற்றை
தெற்றுப்பல் சிரிப்பே
போதுமானதாக இருக்கிறது எனக்கு.
தமிழ், கவிதைகள், தமிழ் கவிதைகள் ,நட்பு, நட்புக்கவிதைகள்,படித்ததில் பிடித்தவை